×

இங்கிலாந்தில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை.. தடுப்பூசி திட்டம், முழு ஊரடங்கு மூலம் சாதித்து காட்டிய பிரதமர் போரிஸ் ஜான்சன்

லண்டன்: கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப் பிறகு, இங்கிலாந்தில் கடந்த திங்கள்கிழமை, முழுமையாக 24 மணி நேரத்திற்கு ஒரு நபருக்குக் கூட கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. பிரிட்டனில் கொரோனா பரவல் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு முன் அங்கு மீண்டும் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.அதேபோல தடுப்பூசி செலுத்தும் பணிகளும் அங்குத் தீவிரப்படுத்தப்பட்டது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பிரிட்டனில் தடுப்பூசி பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தடுப்பூசி மற்றும் முறையான ஊரடங்கு ஆகியவை காரணமாகவே பிரிட்டன் நாட்டில் கொரோனா பரவல் கிட்டதட்ட முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.கடந்த மே 10ம் தேதி, 24 மணி நேரத்தில், பிரிட்டனில் மொத்தம் 2,357 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. நான்கு பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்தனர். குறிப்பாக பிரிட்டனின் முக்கிய பிராந்தியமான இங்கிலாந்தில் திங்கள்கிழமை ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. பிரிட்டன் நாட்டின் இதர பிராந்தியங்களிலேயே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.அதேபோல பிரிட்டனின் பிராந்தியங்களான இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளில் உயிரிழப்புகளும் ஒருவருக்கும் உறுதி செய்யப்படவில்லை. நான்கு உயிரிழப்புகளும் வேல்ஸ் பிராந்தியத்திலேயே உறுதி செய்யப்பட்டது. பொதுமக்களின் முயற்சிகள் மற்றும் தடுப்பூசி திட்டத்தின் காரணமாக, கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் இங்கிலாந்து ஏற்படவில்லை என்று இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி தெரிவித்தார்….

The post இங்கிலாந்தில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை.. தடுப்பூசி திட்டம், முழு ஊரடங்கு மூலம் சாதித்து காட்டிய பிரதமர் போரிஸ் ஜான்சன் appeared first on Dinakaran.

Tags : UK ,Boris Johnson ,London ,England ,
× RELATED லண்டனில் நடக்கும் நிகழ்ச்சிக்கு...